Jet tamil
இலங்கை

அடுத்த சில மணி நேரங்களில் கடும் சூறாவளி ஏற்படும் வாய்ப்பு!

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள யாஸ் சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக நாட்டில் பலத்த காற்று வீச ஆரம்பித்திருப்பதாகவும் நாட்டின் தென் மேற்கு பகுதியில் மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேடமாக மேற்கு, சப்ரகமுவ ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் காற்றின் வேகம் 50 தொடக்கம் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிப்பதுடன் விசேடமாக மத்திய மேற்கு மலை சாரல், வட மத்திய, வட மேற்கு மாகாணங்களிலும், கேகாலை, வவுனியா முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும்.

மேல் மாகாண கரையோரப் பகுதியிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காற்று 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment