ஜோதிடத்தில் குரு பெயர்ச்சியைப் போல அதிசார குரு பெயர்ச்சி பெரியளவில் கவனிக்கப்படாமல் இருந்தது.
ஆனால் இந்த முறை அதிசார குரு பெயர்ச்சி அதிகமாக கவனிக்கப்பட சில காரணங்கள் உள்ளன.
எப்போதும் ஒரிரு மாதங்கள் அதிசாரமாக செல்லும் குரு இந்த முறை கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கும் அதிகமாக மகரத்திலிருந்து கும்பத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
இந் நிகழ்வு ஏப்ரல் 05 ம் தேதி இரவு 12. 43 மணிக்கு குருபகவான் மகர ராசிலிருந்து கும்ப ராசியில் இருக்கும், அஸ்தம் 3, 4 பாதம், சதயம் நட்சத்திரம் வரை அதிசார பெயர்ச்சியாகி, செப்டம்பர் 13ம் தேதி மீண்டும் மகரத்திற்குத் திரும்புவார்.
அதிசார குரு பெயர்ச்சி 06.04.2021 முதல் 15.09.2021 வரை உச்சம் தொடும் அந்த 5 ராசிகள் பற்றி பார்ப்போம்.