இலங்கையில் சதோச விற்பனை நிலையங்கள் பெரிய வெங்காயம், சிவப்பு பச்சையரிசி மற்றும் உள்நாட்டு கிழங்கு உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
சந்தையில் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 195 ரூபாவுக்கும், உள்நாட்டு கிழங்கு 150 ரூபாவுக்கும், சிவப்பு பச்சையரிசி 89 ரூபாவுக்கும் சதோச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த குறித்த விலைக்குறைப்பு நடவடிக்கையானது இன்று முதல் அமுலுக்கு வரும்வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.
அதுமட்டுமல்லாது கடந்த பெப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்ட 27 பொருட்களுக்கான விலைக்குறைப்பானது அதே நிலையில் கொள்ளப்படுமெனவும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.