இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாட்டுடன் மிக நெருங்கிய தொடர்புகளை உடைய பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் அலுவகத்தில் பணியாற்றியவரும்,
பெயர் வெளியிட விரும்பாத தொழிலாளர் கட்சியின் மூத்த பிரபலத்தை சுட்டிக் காட்டி செய்தி ஊடகம் ஒன்று இவ்வாறு வெளியிட்டுள்ளது.
ஓப்ராவுடனான நேர்காணலில் இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள், பிரித்தானியா அரச குடும்பம் மீது சரமாரியாக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்நிலையில் ஓப்ரா நேர்காணலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பரபரப்பை பயன்படுத்த தனது அரசியல் பிரவேசத்தை தொடங்க மேகன் மெர்க்கல் திட்டமிட்டு வருவதாக தொழிலாளர் கட்சியின் மூத்த பிரபலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடுவது குறித்தும் பைடனின் அமெரிக்க ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் மெர்க்கல் ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
2024 வது ஆண்டில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ டைபன் 82 வயதாகும் என்பதால் அவர் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பார்,
அதனால் மெர்க்கல் போட்டியிட விரும்புவதாக ஜனநாயக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.