Jet tamil
இலங்கை

அம்பாறையில் குப்பையில் கிடந்த 12 பவுண் தங்க நகை!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் வேலையின் போது ஒரு வீட்டின் குப்பை பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை ஒன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டின் உரிமையாளர் அவரது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்றமையினால் 12 பவுண் நகையை தவறுதலாக குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார்.

அந்தபொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலையில், குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய போது காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டதை அடுத்து, இவ்விடயம் சம்மாந்துறை பிரதேச சபை திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் உத்தரவுக்கு அமைவாக உடனடியாக, சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களின் உதவியை பயன்படுத்தி குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக் குப்பைகளும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மீள சோதனை செய்து, குறித்த நபரின் 12 பவுண் தங்க நகை தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபரிடம் இன்று (22ம் திகதி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்போது சம்மாந்துறை பிரதேச சபைக்கு நற்பெயரை ஏற்படுத்தி கொடுத்தமைக்காகவும் கழிவுக் குப்பைகளை பெரும் சிரமங்களுக்கு இடையில் தேடி தங்க நகை கண்டுபிடிக்கப்பட்டமைக்கு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் குறித்த மேற்பார்வையாளர், சுகாதார ஊழியர்கள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி நிலைய ஊழியர்களுக்கும் நன்றிகளும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment