Jet tamil
கல்வி

அரசின் புதிய திட்டம், 10 000 மாணவர்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு..!

நாட்டில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் computer science தொடர்பில் புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த பாடநெறிக்கு 10, 000 மாணவர்களை சேர்த்து கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் ரணசிங்க கூறியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

புதிய தொழில் சந்தைக்கு நமது நாட்டு பட்டதாரிகள் பொருத்தமானவர்களா என்பது, இவர்களுக்கு வரும் பெரும் குற்றச்சாட்டாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வியாபார துறையுடன் சேர்ந்து அவர்களின் ஆலோசனைகள் மற்றும் வியாபாரத் துறையை இணைத்து இவ் புதிய பாடநெறியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

க. பொ. த உயர்தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள், மற்றும் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் நுழைவு பரீட்சைக்கு தோன்றுவதன் ஊடாக இந்தப் பாடநெறியை தொடர சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இத்துடன் தூர பிரதேச மாணவர்கள் தமது பிரதேசங்களை விட்டு கொழும்புக்கு வருகைதர வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது தொழில் செய்பவர்களும் இந்தப் பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியும், எனினும் மாணவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாதாரண பாடநெறி கட்டணமொன்று அறவிடப்படும்.

கடந்த ஆண்டு மூன்று லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன், அவர்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் வரை மாத்திரமே பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இந்த மாணவர்களில் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

ஏனைய மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கான தேவை காணப்பட்டபோதிலும் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை.

எனவே தான் இந்தப் புதிய பட்டபடிப்பானது இதற்கான ஓர் சிறந்ததொரு சந்தர்ப்பமாகும்.

வரலாற்றிலே தற்போது முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

Related posts

பரீட்சைகள் மீள நடத்தப்படும் திகதிகள் வெளியீடு..!

jettamil

கொரிய மொழி தேர்வுக்கான அனுமதி அட்டைகள் இன்று முதல் ஆன்லைனில்…

kajee

வடக்கில் 3 பாடசாலைகள் இலங்கையின் சிறந்த பாடசாலையாக தேர்வு..!

kajee

இன்று நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைகள்!

Sinthu

சாதாரண பரிட்சை முடிவுகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

Sinthu

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பாக அறிவிப்பு!

Sinthu

Leave a Comment