Jet tamil
இலங்கை

அரச, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி !

sanna

அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட்  தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வார இறுதி நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்சமயம் தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்றும் அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ, கொத்தட்டுவ, மொரட்டுவ, எகொடஉயன, ஹங்வெல்ல ஆகிய இடங்களில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில், கம்பஹா, அத்தனகல்ல, நீர்கொழும்பு, சீதுவ, மஹர, பியகம, வத்தளை, மீரிகம, ராகம, மினுவாங்கொட, ஜாஎல, களனி, கட்டான, திவுலபிட்டிய, தொம்பே ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, பண்டாரகம, பாணந்துறை, ஹொரண, மத்துகம ஆகிய பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment