இடையூறு விளைவிக்கும் ஊழியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பணிகள், செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநிறுத்தம் செய்யவும் அல்லது அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தங்கள் ஒப்புதலுக்காக திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு மின்சாரக் கட்டணக் குறைப்பு முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.