இந்திய கிரிக்கெட் அணியினுடைய முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.டோனியினுடைய வித்தியாசமான கெட்அப் புகைப்படம் ஒன்று மிக வேகமாக இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
சமூக வலைதளம் ஊடாக வேகமாகப் பரவிவரும் டோனியின் புகைப்படம் ஆனது ,
பௌத்த துறவிபோல ஆடையணிந்து தலைக்கு மொட்டை போட்டுக்கொண்டு வித்தியாசமாக இருக்கும் டோனியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அத்துடன் முன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கலக்கிய டோனி தற்போது அனைத்துலகப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் (IPL) போட்டிகளில் மட்டும் அதிகமான கவனத்தை அவர் செலுத்தி வருகிறார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக வலம்வரும் அவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 14 வது ஐபிஎல் (IPL) தொடரில் விளையாடவுள்ளார்.
இதற்காக இவர் அதி தீவிரப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பௌத்த துறவிபோல ஆடையணிந்த வண்ணம் தலையில் மொட்டை போட்டுக்கொண்டு இருக்கும் டோனியின் புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த புகைப்படமானது, இது ஓர் நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சி தேவைக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து, டோனியின் புதிய கெட்அப் இல் உள்ள புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது இந்தப் புகைப்படம் அதிகம் வைரலாகி வருகிறது.