இன்றைய தினம் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் நேற்றையதினம் நாட்டை வந்தடைந்தன.
கொவெக்ஸ் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சுக்கு 14 இலட்சம் அஸ்ட்ரா ஸெனெக்கா தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2, 64,000 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்றைய தினம் அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன்,
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 5, 284 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் இதுவரையில் 7, 29, 562 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.