பிரான்சில் தொலைபேசியை பயன்படுத்தி மேற்கொண்ட கொரோனா சோதனையில் 90% துல்லியமான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது தற்போது அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் மிகவும் வேகமாக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டிலும் தினமும் மிக அதிகளவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பதிவாகி வருகின்றது.
இந்நிலையில் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தொலைபேசி்யை பயன்படுத்தி மிகவும் வேகமாக கொரோனா தொற்றை அறிவதை கண்டுபிடித்துள்ளனர். CORDIAL -1 எனும் பெயரில் 300 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 90 சதவீதம் வெற்றிகரமான துல்லியமான முடிவுகள் கிடைக்கப் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
சளி மாதிரியினை கண்டறியும் மிகவும் சிறிய கருவியை தொலைபேசியில் பொருத்தினால், அதன்மூலம் 10 நிமிடத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 1000 நபர்களை பரிசோதனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பிரான்சில் இதுவரையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,629,891 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது