இன்று முதல் ஆரம்பமாகும் க. பொ. த உயர்தரப் பரீட்சை
க. பொ. த உயர்தரப் பரீட்சை (2023) இன்று (04) முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2298 பரீட்சை நிலையங்களில் 346976 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, 319 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்கள் காணப்படுகின்றன.
இவ்விடயம் குறித்து மேலும் அவர்,
பொலன்னறுவை, வெலிகந்த, அரலகங்வில, திம்புலாகல ஆகிய கல்விப் பிரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை பெற விரும்புவோருக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அந்த நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பரீட்சை சீட்டு செல்லுபடியாகும்.
பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்குச் செல்வதற்கு இறுதித் தருணம் வரை காத்திருக்க வேண்டாம், குறைந்தது அரை மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.
சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது!
தனது நிலையத்திற்கு செல்வதற்கு ஏதேனும் இடையூறு இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது பரீட்சை திணைக்களத்தினால் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் 1911 இலக்கத்திற்கு அழைக்கலாம்.
பரீட்சை காலத்தில் ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட உரிய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளதோடு, அந்த நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப செயற்படும்.” என்றார்.
அத்துடன், பரீட்சைகள் இன்று தொடங்கி ஜனவரி 31ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடுப்பிட்டியில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு கோரி உடுப்பிட்டி மக்கள் போராட்டம்!