இன, மதங்களுக்கு இடையிலான பதற்ற நிலை தொடர்பான கலந்துரையாடல்
தேசிய சமாதான பேரவை மற்றும் சொண்ட் நிறுவனத்தின் கூட்டுறவினால், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன, மதங்களுக்கு இடையிலான பதற்ற நிலை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கூட்டம் சமூக நல்லுறவு, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்து இன ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கான நோக்கத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்ட சர்வ மத குழு உறுப்பினர்கள், இளைஞர்கள், உள்ளூராட்சி மன்ற பெண்கள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
சர்வ மத குழுவின் இணைப்பாளர் செல்வி ஜென்சி விக்டர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டம், தேசிய சமாதான பேரவையின் திட்ட உத்தியோகத்தர் முனீப் ரஹ்மான் அவர்களால் வழிநடத்தப்பட்டது.
கலந்துரையாடலில் சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் செந்துராசா அவர்களின் உரையில், “எனினும், இனமத நல்லிணத்துக்காக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் சாதகமான செய்திகள், மாற்றத்தை உருவாக்குவதற்கு முக்கியமாக செயல்படும்” என குறிப்பிட்டார்.
இதோடு, பல மத தலைவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத குழுவினர் திட்டத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.