இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி 2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்.