இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணைக்கு மனித உரிமைகள் பேரவை ஆதரவளிக்க வேண்டும் என்று , அமெரிக்காவின் உடைய ராஜாங்க செயலாளர் அந்தனி ஜே ப்லிங்கென கருத்தை முன்வைத்துள்ளார்.
ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் காணொளி ஊடாக உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற பல அட்டூழியங்களுக்கு இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், தற்போது இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையை ஆதரிப்பதற்கு உன்றுதல் வழங்கப்படுகிறது, மேலும் மனித உரிமைகளை தொடர்ந்தும் பாதுகாக்க அமெரிக்கா எப்போதும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தனி ஜே பலிங்கென் கூறியுள்ளார்.