நாட்டில் தற்போது கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான 02 மரணங்கள் நேற்று (25ம் திகதி) பதிவாகியுள்ளதென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (25ம் திகதி) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 457 இல் இருந்து 459 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள ஊடக அறிக்கை பின்வருமாறு வெளியிட்டுள்ளது.