இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து சுமார் 12 ஆண்டுகள் கழிந்த பிற்பாடும் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது என்பதை அரசு உறுதிப்படுத்தப்படவில்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மீஷெல் பச்சலெட் தெரிவித்துள்ளது, இலங்கை தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ. நா சபையின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 46 வது கூட்டத் தொடர் தற்பொழுது ஆரம்பித்துள்ளதுடன், இலங்கை தொடர்பிலான மிகக் காரசாரமான அறிக்கைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் இலங்கை தனது நட்பு நாடுகளை துணைக்கு அழைத்து, கடும் நெருக்கடிகளை சமாளிக்க பல முயற்சிகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..