இலங்கை – இந்திய சுற்றுலா விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது இந்திய அரசாங்கத்தின் ஆலோசனை என்று சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கும் இடையில் சுற்றுலா விமானசேவைகளை விரைவாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் அதன் செயற்பாடுளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.