2015ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், 2015ஆம் ஆண்டின் அணு சக்தி ஒப்பந்தங்களுக்கு ஈரான் இணங்கும்வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது.
சில நாட்களுக்கு முன்னர் அனைத்து விதிமுறைகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பத்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது.
ஈரானுடனான தங்களது உறவை மேம்படுத்தும் வாய்ப்பாக இதனைக் கருதுவோம்’ என கூறினார்.
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக கூறி அதிலிருந்து விலகினார்.
மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை விதித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது.