Jet tamil
Uncategorized

உங்கள் முகத்தில் எண்ணெய் வழியுதா? அப்போ இதை செய்யுங்க..!

எண்ணெய் வழியும் முகத்தால் பல நேரங்களில் முகத்தின் அழகு பெரிதும் கெட்டு விடுகிறது. இதனை எப்படி எல்லாம் சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம்.

எம்மில் பலருக்கு இருக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று தான் எண்ணெய் வழியும் முகம். எண்ணெய் வழியும் முகத்தால் பல சந்தர்ப்பங்களில் முகத்தின் அழகே பெரிதும் கெட்டு விடுகிறது.

இதனை எப்படி சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம்.

எமது முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவிக்கொள்ள வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் அ‌திக புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

அ‌த்துட‌ன் , முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி அ‌திக பளபளப்பாக இருக்கும்.

தக்காளியை எடு‌த்து நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை முற்றாக நீங்கி முகம் பளிச்சென மாறும்.

அதே போல முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.

நாம் காலை எழுந்ததும் வெள்ளரிக்காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வந்தால் எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெரும். இவ்வாறான எளிய தீர்வுகளை செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை சரி செய்து பொலிவான முகத்தை பெறமுடியும்.

Related posts

பூநகரியில் யாழ் இளைஞன் வெட்டிக் கொலை…

Sinthu

Leave a Comment