உடுத்துறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருளினால் பரபரப்பு
வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியிலையே இந்த மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளது
கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது
அண்மைய நாட்களாக உடுத்துறை வேம்படி,நாகர்கோவில்,உடுத்துறை என பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.