கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையை ஆகஸ்ட் மாதமும் அதேவேளையில்,
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையை டிசம்பர் மாதமும் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில், இந்த தீர்மானம் 2023 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் என்று கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.