உரும்பிராயில் 80 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேகபர் கைது
இன்றையதினம் யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் உரும்பிராய் பிரதேசத்தில் 80 கிலோகிராம் அளவிலான கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்துள்ளனர்.
இந்த கேரள கஞ்சா தொகையானது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த வேளை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.