கட்டைக்காட்டில் பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு
போதைப்பொருள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வீடு ஒன்றை சுற்றிவளைத்து நீண்ட நேர தேடுதலின் போது எதுவும் கிடைக்காததால் மருதங்கேணி பொலிசார் திரும்பிச் சென்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்ற கஞ்சா பொதிகள் கரையொதுங்கியதை அடுத்து அதில் சிலவற்றை கடற்படையினர் மீட்டுள்ளதோடு கரையொதுங்கிய பல பொதிகளை சிலர் கடத்திச் சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கட்டைக்காட்டில் மருதங்கேணி பொலிசாரால் நேற்று மதியம் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.