ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் மேற்படி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின்போது ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானை நோக்கி தோண்டப்பட்ட சுரங்கப் பாதைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கத்யோக் வனப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது மலையடிவாரத்தில் உள்ள ஒரு குகையில் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், பயங்கரவாதிகள் விட்டுச் சென்ற துப்பாக்கிகள், மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.