கிளாலி படுகொலை நினைவேந்தல் த.தே.ம.முன்னணி அலுவலகத்தில் அனுஷ்டிப்பு
இன்று கிழாலி படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
கிளாலி கடலில் 1993 இதே நாளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்கள், இதேநாளில் மன்னார் படகுத்துறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5தமிழ் மாணவர்கள் என அனைவரையும் நினைவுகூரும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
இதன்போது உயிர் நீத்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.