தாக்குதல் நடத்தப்படும் என்ற கடிதம் ஒன்று காரணமாக கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்களில் தாக்குதல் நடத்த தயார் நிலைகள் காணப்படுவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து கொழும்பு கொச்சிக்கடை கரையோரப் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடும் கிடைத்துள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அச்சுறுத்தல் விடுப்பதற்காக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.