எழுமாற்றாக கொடிகாமம் பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பொதுச் சந்தை இன்றையதினம் (புதன்கிழமை) மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வடக்கில் நேற்றையதினம் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் குறித்த வியாபாரியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.