நாட்டில் மேலும் 968 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது,
இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 983ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில், இன்னும் ஐயாயிரத்து 617 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை 323 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.