யாழ் கரணவாய் கிழக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 20 ம் திகதி திருட முயன்ற இரு நபர்களை கொழும்பில் வசித்து வரும் வீட்டு உரிமையாளர் சி.சி.ரிவி கமரா மூலம் அவதானித்து, உடன் அயலவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரியப்படுத்தியதை அடுத்து அயலவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விளைவாக குறித்த இரு நபர்களும் பிடிக்கப்பட்டனர்.
அதன் பின் குறித்த இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் . பொலிஸார் இருவரையும் மேலதிக விசாரணையின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது…