இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுர்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதை தொடர்ந்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் அண்மைக் காலமாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கோரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
மகராஷ்ரா மற்றும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையிலேயே சச்சின் டெண்டுர்கருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர்,
“கொரோனா அறிகுறி தென்பட்டதால், தானாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டேன், இதில் எனக்குத் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகவில்லை.
தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.