இரத்தினபுரி, குருவிட்ட, கிரிஎல்ல, அயகம மற்றும் எலபாத்த முதலான பிரதேச செயலக பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் எஸ்.கே.சீ. சுகீஸ்வர இதனைத் தெரிவித்தார்.
களுகங்கை படுக்கையின் மேற்பாங்கான பகுதிகளில், 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை அடுத்து, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று மற்றும் நாளையும் பலத்த மழை பெய்தால், இரத்தினபுரிக்கு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக திணைக்களத்தின் நீர்விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் எஸ்.கே.சீ. சுகீஸ்வர தெரிவித்தார்.