படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் அவைகளின் கூட்டு குங்குமம் ஆகும். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக்கொண்ட பின்புதான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், அரக்கு குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
தெய்வீகத்தன்மை , சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மை உண்டாகுமாம்.
குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது. படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது. தொற்றுநோய்களும் அண்டாது. மூளைக்கு செல்லும் நரம்புகள், அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும். குங்குமம் அணிவதால், நெற்றியில் சூடு தணிகிறது.
திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டில் தொடக்கத்திலும் கூங்குமாம் அணிவது சிறப்பை உண்டாகுமாம். ஆண்கள் இரு புருவங்களை இணைத்தாற் போல் குங்குமம் அணிவதும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
கட்டைவிரலால் குங்குமம் இட்டுக்கொள்வது மிகுந்த துணிவைக்கொடுக்கும். அத்துடன் குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை , நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
சனிவிரல் (நடுவிரல் ) குங்குமம் இட்டுக்கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீகத்தன்மை உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுப்பாட்டுக்கு நல்லது.
இன்றைய நவீன யுகத்தில் குங்குமம் அணிவது என்பது ஸ்ரிக்கர் பொட்டுகளை அழகுக்காக அணிந்து கொள்வதனையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர் இதனால் நமக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவது இல்லை.
எனவேதான் நமது இந்து சமயத்தின் தெய்வீகத்தன்மையினை உணர்ந்து அதன்படி நடப்பது நமக்கு நன்மை பயக்கும்.