பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடிக்கணக்கான பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் .
போதைப்பொருள் வர்த்தகர்களினால் இந்த தொகை பணம் பதுக்கி வைப்பட்டிருக்கலாம் என்றும் , நாளாந்தம் குறைந்து மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமாக பணம் இவ்வாறு பதுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்கள்.
நாட்டில் தற்போது போதைப்பொருள் விற்பனை செய்யும் பணத்தை வங்கிகளில் வைப்பில் இடும் கணக்குகளை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதன் காரணமாக அவர்களால் வங்கிகளில் பணத்தை வைப்பில் இட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது .
இதற்கு முன்னர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணம் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அண்மைய காலமாக இந்த நடவடிக்கையும் முடியாமல் போயுள்ளது .
அத்துடன் நாட்டில் போ தைப் பொருளுக்கு அடிமையானவர்கள் பல இலட்சக் கண க்கில் உள்ளனர் . இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 3 கிலோ கிராம் அளவுக்கு போதைப் பொருள் தேவைப்படுவதாக கண்டுபிடிக்கப்பட் டுள்ளது .