கொரோனா தடுப்பூசிகளான கொவிஷீல்ட் மற்றும் கொவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்தத் தடைவிதிக்குமாறு கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.இதுகுறித்த, பொதுநல வழக்கு நீதிபதிகளான எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
இதன்போது, மூன்றாம் கட்டப் பரிசோதனை நடந்துகொண்டிருக்கும் போதே அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்ட மனுதாரர், தடுப்பூசிகளின் பாதுகாப்பு, செயற்றிறன் குறித்த தரமதிப்பாய்வு செய்யப்படாமலும், நெறிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முறைப்படளித்தார்.
இந்நிலையில், நிபுணர் குழு அமைத்து அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்ததுடன், மனுதாரர் விரும்பாவிட்டால் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாமல் இருந்து கொள்ளலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.