சீன அரசால் நிதியளிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால் திறக்கப்பட்ட குறித்த பெயர் பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகள் இடம்பெற்றிருந்தபோதும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இவ் விடயம் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன, கவனக்குறைவு காரணமாக தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆகவே குறித்த பெயர்ப்பலகை மீண்டும் சரிசெய்யப்பட்டு மாற்றப்படும் என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன குறிப்பிட்டார்.