Jet tamil
இலங்கை

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் புதிய கட்டுப்பாடுகள் !

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

எனினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொவிட் 19 கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

குடும்பங்கள் ஒன்று கூடுவது தடைப்படும் என்பதனால் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் புத்தாண்டுக்கு முன்னதாக பொலிஸார், சுகாதார அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

குறித்த நாட்களில் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை கொவிட் தொற்றுநோயின் அச்சுறுத்தல் இலங்கையில் தற்போதும் காணப்படுவதால் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண அவர்களும் தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment