தமிழ் மொழிபெயர்ப்பு வேண்டும் – தொல்லியல் திணைக்கள விடையதானத்தை நீக்கிய அமைச்சர் டக்ளஸ்
தொல்லியல் திணைக்ளம் தொடர்பான கலந்துரையாடல் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத காரணத்தினால் நிகழ்ச்சி நிரலில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்தமைக்கு இணங்க அபிவிருத்தி கலந்துரையாடலில் இருந்து நீக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்த ஆண்டுக்கான இறுதி அபிவிருத்திக் குழு கூட்டம் இடம்பெற்றது.
கூட்ட நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் போது தொல்லியல் திணைக்களம் தொடர்பான விடயதானம் குறித்த கலந்துரையாடலில் சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் விடைய தானங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமை தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத விடயங்கள் அனைத்தையும் நீக்குமாறு அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் குறித்த விடையதானம் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டது.