தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமாக வலம் வந்த வண்ணம் உள்ளார், தளபதியின் நடிப்பில் அண்மையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வசூல் வேட்டை சாதனை படைத்துள்ளது.
இப்படி இருக்க தற்போது இளைய தளபதி விஜய் அவர்கள் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பும் வெகு விரைவில் ஆரம்பமாகவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.
இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்கத்தில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவர்கார்த்திகேயன் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற திரைப்படங்களில் பாடலை எழுதியிருந்தார்.
இவ்வாறு தற்போது சிவகார்த்திகேயன், நெல்சன் அவர்கள் அடுத்து இயக்கவுள்ள தளபதி 65 படத்திலும் பாடலை எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் நடனமைப்பாளர் சதிஷ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.