தியாகியால் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு
தியாகி அறக்கட்டளையின் நிறுவுனர் வாமதேவ தியாகேந்திரன் அவர்களால் இன்றையதினம் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அவரது மகனின் 38வது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு உலருணவு பொதிகள், சக்கர நாற்காலிகள், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மறைந்த நடிகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு மக்களை மகிழ்ச்சிப் படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.