வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்ழை துர்க்காதேவி நாலா திசையும் வானுயர்ந்த கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றாள்
அந்த வகையில் ஆலயத்தின் தலைவாசல் கோபுரம் அமைப்பதற்கான கட்டுமாப்பணிகளுக்காக நேற்றைய தினம் (02.03.2021 வெள்ளிக்கிழமை) காலை சுப வேளையில் அம்பாளின் திருவருளால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அம்பாளின் வானுயர கம்பீரமாக அமையவிருக்கும் கோபுர அடிக்கல் நாட்டுவிழாவில் அம்பாளின் சிறப்பு மற்றும் கோபுரங்களின் எழில்கொஞ்சும் கவினழகை பற்றி “பாடலாசிரியர் பூலோகம் செவ்வதியம்மாவினால்” புகழ் பாமாலை அருளப்பட்டது.
அந்த புகழ் பாமாலை…
தெல்லியூரின் வீதி தனில் தெருவில் நிற்க காட்சி தரும்
வண்ணநிலைக் கோபுரமாம் வானுயர்ந்த புகழ் மலையாம்.
பஞ்ச எனும் நிலை கொண்டு ஐந்து கோபுர எழுச்சியுடன்
பவனி சிறக்க வரப்போகும் பாதை தொடக்க கோபுரமாம்.
இராஜ ராஜ சோழன் புகழ் வானுயர்ந்த கோபுரத்தில் இராஜ கோபுர அமைப்பாக தெல்லியூரில் முதற் துலக்கம்.
(தெல்லிநகர்….)
அன்னையவள் அருளாசி அடியவர்க்கு அருட் காட்சி
சொன்ன குரு யோக நாதன் சொற் கோபுர நிலை காண்போம்.
கொடிய நோயின் தாக்கமது
கெட்டொழிந்து போய்விடவே..
கோடி கோடி முழக்கத்துடன்
குடி கொள்ளப் போகும் திருக்காட்சி
(தெல்லிநகர்….)
ஈழத்திரு நாட்டினிலே இன்று வரை இல்லாத
இனிய தொரு புதுப்பணியில்
இயங்கப் போகும் திருத்தலமாம்.
அடிக்கல்லின் நாட்டுகையை
ஆரம்பித்து வைக்கின்றோம்
குட முழுக்கு நிகழ்வு தனை குறையின்றிக் காண்பதற்கு.
(தெல்லிநகர்….)
இன்று இந்த பூரிப்பு
இனி வருகின்ற சந்ததியும்
கண்டுகண்டு இன்ப முற
கலைநயமாய்திகழ்ந்திடுமே.
முன் வாயிற் கோபுரத்தால்
உள் நுழைந்து போகையிலே
உள்ளம் கொள்ளும் ஆனந்தம்
உலகில் சொல்ல முடியாது.
(தெல்லிநகர்….)
அன்னை துர்க்கை தேவியளின்
அருட்பார்வை நிலையங்கு
கோபுரத்தின் தரிசனமாய்..
கோடி புண்ணியமாம்…
(தெல்லிநகர்)
அதே வேளை தலை வாயில் கோபுர திருப்பணி இடம்பெறுவதனால் (கிழக்கு வாயில்) ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்கள் 8 ம் கட்டை வீதியூடாகவும் மற்றும் வடக்கு குபேர வாயில் ஊடாகவும் வருகைதந்து ஆலயத்தை தரிசிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி- தெல்லிப்பழை முகநூல்