நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு திடீர் என மயங்கி விழுந்ததார்.
இந்நிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆயினும் சிகிச்சை பலனின்றி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.35 மணி அளவில் உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.