நல்லை கந்தன் ஆலயத்தில் திருவாதிரை உற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி நல்லூர் கந்த சுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நாள் திருவெம்பாவை உற்சவத்தின் இறுதிநாளின் திருவாதிரை உற்சவம் காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலவனுக்கும், வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கான விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியுடாக மற்றும் வெளிவீதியுடாக எம்பெருமான் மயில் வாகனத்தில் சமேதராக வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இவ் உற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வைகுந்தகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
இதில் பகுதிகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.