மஹியங்கனையில் இரு தொழிற்சாலைகளில் பரவிய கொரோனா தொற்று மற்றும் பி.சிஆர் இயந்திரங்கள் பழுதானமை காரணமாகவே அண்மைய நாட்களில் கொரோனா நோயாளர்கள் அதிகம் பதிவாகினர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், மஹியங்கனையில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளின் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அனுராதபுரத்தில் ஒரு இயந்திரம் உட்பட பல பி.சி.ஆர் இயந்திரங்கள் தற்போது உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மாதிரிகளை பரிசோதிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் காணரமாக பி.சி.ஆர் முடிவுகள் முடிவுகள் மொத்தமாக அறிவிக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என்று COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனானவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது குறித்து COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.