நீண்ட நாட்களின் பின் பொதுவெளிக்கு வந்த கோட்டாபய
பொதுவெளிக்கு வருகை தராத முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று கொழும்பிலுள்ள விகாரையொன்றுக்கு தனது குடும்ப சகிதம் வருகை தந்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், ஆசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவரும் அவரது குடும்பத்தினரும் கொழும்பிலுள்ள கங்காராமய விகாரைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது அவரும், அவரது குடும்பத்தினரும் குறித்த விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரினிதே அஸ்ஸாஜி தேரரிடம் புத்தாண்டு ஆசிகளை பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் ஆண்டு விழாவிலும் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.