தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் மேற்படி பதவிகளுக்குரிய போட்டிப்பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் கோரப்பட்டுள்ளது. இப்பதவி வெற்றிடங்கள் திறந்த போட்டிப்பரீட்சை மூலம் நிரப்பப்படும். இவ் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி திகதி 2021.02.17 ஆகும்.
விண்ணப்பதாரிகள் www.np.gov.lk – Recruitment & Exam – Advertisement என்ற வடக்குமாகாண இணையத்தளத்திலும் மற்றும் வடக்கு மாகாணத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்ற அலுவலகங்களிலும் மேலே குறிப்பிட்ட பதவிக்கான ஆட்சேர்ப்புத் தொடர்பான விபரங்களை பார்வையிட்டு தகமையுடையவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளவும்.