வர இருக்கும் பண்டிகைகால கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டில் மீண்டும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது .
நாட்டில் வைரஸ் தாக்கம் பரவுவதை கட்டுப்படுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக மருத்துவர் சமந்தா ஆனந்த கூறியுள்ளார் .
பண்டிகைக் காலங்களில் ஏனைய மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருகின்ற மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் .
இதனால் கொழும்பில் மீண்டும் நோய்த்தொற்று பரவலை அதிகரிக்கச் செய்யும் .
இதனால் பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக அமுல்படுத்துவது முக்கியத்துவமாகும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.