இன்றைய தினம் பருத்தித்துறையில் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறையில் நடன ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகி உள்ள நிலையில், தற்போது அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த 12 பேருக்கு தொற்று உள்ளதாக இன்றைய தினம் பிசிஆர் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் மிருசுவிலில் வங்கி உத்தியோகத்தருடன் தொடர்புகொண்ட குடும்பத்துக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த வாரம் அளவில் கண்டறிப்பட்ட நிலையில், தற்போது அவர்களுடன் தொடர்புடைய பருத்தித்துறையை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளதாக தெரிய வந்துள்ளது..
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் துரிதமான நடவடிக்கையால் இந்த 13 நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் கூறியுள்ளார்கள்.