Jet tamil
இலங்கை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை வீரர் சாதனை!

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இலங்கை விமானப்படை வீரர் ஆசியாவில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ரொஷான் அபேசுந்தர என்ற வீரரே இவ்வாறு, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஸ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னார் வரை நீந்தி சாதித்துள்ளார்.

இவர், மொத்தமாக 59.3 கிலோமீற்றர் தூரத்திற்கு நீந்தியுள்ளதுடன், இதற்காக அவருக்கு 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள் மற்றும் 43 விநாடிகள் நேரம் எடுத்துள்ளது.

பாக்கு நீரிணையைக் கடப்பதற்கான தனது பயணத்தை ரோஷான் அபேசுந்தர  நேற்று சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் தலைமன்னார் இறங்குதுறையில் இருந்து ஆரம்பித்தார்.

தமிழகத்தின் தனுஷ்கோடியைச் சென்றடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் நீந்தி இன்று அதிகாலை மூன்று மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

அதேவேளை, இதற்குமுன்னர் 1975ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆழிக்குமரன் என்றழைக்கப்படும் குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மீளத்திரும்பிய முதல் இலங்கையர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment