Jet tamil
இலங்கை

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான தகவல்!

பாடசாலைகள் விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது, மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களு்ககு தற்போது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாகாணங்களிலுள்ள ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் சிலையில், எதிர்வரும் வாரம் நாடளாவிய ரீதியில் இரண்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment